தமிழ் சினிமாவில் லோகேஷ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விக்ரம் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைபடத்தில் உலகநாயகன் கமலஹாசனின் நடிப்பு தனித்துவமாக இருந்தது மட்டுமில்லாமல் ஆக்ஷன் காட்சிகள் அனைத்துமே மிகவும் மிரட்டலாக அமைந்ததை தொடர்ந்து இசையும் ரசிகர்களின் காது குளிரச் செய்துள்ளது.இவ்வாறு இந்த திரைப்படத்தில் இயக்குனர் அனிருத் அவர்கள் தான் இசையமைத்துள்ளார் ஆனால் இதில் இளையராஜாவின் இசையும் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
ஆம் இந்த திரைப்படத்தில் இளையராஜாவின் இசையும் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆனால் இது பலருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ளது அதாவது ஒரு குறிப்பிட்ட காட்சியில் இளையராஜா இசையை லோகேஷ் கனகராஜ் அவர்கள் பயன்படுத்தியுள்ளார் அதாவது இந்த திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் அவர்கள் மறைந்ததன் பிறகு வீட்டில் பலரும் அழுவார்கள் அப்பொழுது கமலஹாசன் அவர்கள் பூச்செடியை போட்டு உழைத்த அனைவரையும் வெளியே போக சொல்வார்.
இதற்கு முக்கிய காரணம் சத்தம் அதிகம் கேட்டால் பேரனின் உடல் நிலைக்கு பாதிப்பு ஏற்படும் கமலஹாசன் பூச்செடியை திடீரென உடைப்பார் மேலும் தன்னுடைய மகன் மறைவை தாங்க முடியாமல் தன்னுடைய பேர குழந்தையை சமாதானப்படுத்துவார் அப்பொழுது இளையராஜாவின் இசை ஒன்று ஒலிக்கும்.
அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் பழைய விக்ரம் திரைப்படத்தின் தீம் மியூசிக் மற்றும் கைதி திரைப்படத்தின் தீம் மியூசிக் போன்ற இரண்டு திரைப்படத்தின் மியூசிக்கும் இந்த விக்ரம் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
ஒருவேலை அனிருத் பின்னணி இசைகள் சுதப்பி விடுவார் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டுதான் லோகேஷ் கனகராஜ் இளையராஜாவின் இசையை விக்ரம் திரைப்படத்தில் பயன்படுத்தினாரோ என பலரும் கூறி வருகிறார்கள்.