குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்து பின் பாடகியாக விஸ்வரூபமெடுத்து ஒருகட்டத்தில் ஹீரோயின்னாக மாறியவர் கீர்த்தி சுரேஷ். இவர் தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றி நடித்து வருகிறார் அதிலும் குறிப்பாக தமிழில் இவர் இதுவரை நடித்த திரைப்படங்கள் அனைத்துமே..
வெற்றியை பதிவு செய்துள்ளதால் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிகை கீர்த்தி சுரேஷ். மேலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விக்ரம், விஜய், சூர்யா போன்ற நடிகர்கள் படங்களில் நடித்து வருவதால் அவரது மார்க்கெட் உச்சத்தில் இருப்பதோடு சம்பளமும் அதிகமாக வாங்கி வருகிறார்.
டாப் ஹீரோ படங்களில் மட்டும் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து வித்தியாசமான படங்களில் சோலோவாகவும் நடித்து தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி வருகிறார் அதன் காரணமாகவே அண்மையில் இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. கடைசியாக கூட இவர் தமிழில் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் புதிய படங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் செல்வராகவனுடன் கைகோர்த்து சாணி காயிதம் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வெகுவிரைவிலேயே வெளிவர ரெடியாக இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகை கீர்த்தி சுரேஷ் அன்மையில் உடல் எடையை அதிரடியாகக் குறைத்து.
தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆம் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு கிளாமராகவும், க்யூட்டான புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் தற்போது கூட நடுக்கடலில் போர்ட் ஒன்றில் நின்றபடி இவர் எடுத்த புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.