தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஜூலி இவர் அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார். ஒரு பிரபலமான நமது நடிகை தற்போது பல பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கெத்து காட்டி வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஜூலி தற்போது காவல் நிலையத்தில் தன்னுடைய காதலன் தன்னை ஏமாற்றியதாக புகார் அளித்தது மட்டுமில்லாமல் தன்னிடம் பணம், தங்க நகை என பலவற்றை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி பெற்றுக்கொண்டதாக குற்றச்சாட்டு கூறி உள்ளார்.
நடிகை ஜூலி அழகு நிலையத்திற்கு அடிக்கடி செல்வது வழக்கம் தான் அந்த வகையில் அந்த அழகு நிலையத்தில் மேனேஜர் பதவியில் இருந்த மனிஷிடன் காதல் ஏற்பட்டதாகவும் அதன்பிறகு இருவரும் நெருக்கமாக பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஜூலி தன்னுடைய ஆசை காதலனுக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்தது மட்டும் இல்லாமல் இரண்டு சவரன் தங்க ஜெயின் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் மற்றும் 2.50 லட்சம் பணம் என பல்வேறு உதவிகளை செய்துள்ளாராம்.
இது குறித்து அவருடைய காதலனிடம் விசாரணை நடத்திய பொழுது ஜூலியின் முதல் காதல் பிரிவின் போது அவருக்கு ஆறுதலாக பேசிய பொழுது எங்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு விட்டது பின்னர் ஜூலி வேறு ஒருவருடன் காதல் ஏற்பட்ட பிறகு என்னை கழட்டி விட்டு விட்டார் என போலீஸ் விசாரணையில் அவர் கூரியுள்ளார்.
இதனை தொடர்ந்து மனிஷ் ஜூலிக்கு போன் செய்து நீ இல்லாமல் என்னால் வாழ இயலாது என அழுது ஆர்ப்பாட்டம் செய்தது மட்டும் இல்லாமல் அடிக்கடி கால் செய்து பேச சொல்லி உள்ளார். இந்நிலையில் ஜூலி அளித்த புகாரின் இப்படி அவருடைய காதலன் வாங்கி கொடுத்த அனைத்து பொருட்களையும் போலீஸ் அதிகாரி முன்னிலையில் திருப்பி கொடுத்துள்ளார்.
ஜூலி கொடுத்த புகாரில் காதலன் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததாக கூரியிருந்தார் ஆனால் விசாரணையில் ஜூலி ஏமாற்றியதாக அவருடைய காதலன் கூறியது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.