விஜயின் பீஸ்ட் படத்தில் இணைந்தாரா நடிகர் கவின்.? பேட்டியில் அவரே சொன்ன தகவல்.

kavin-and-vijay
kavin-and-vijay

சினிமா உலகத்திற்குள் அடி எடுத்து வைக்கும் பிரபலங்கள் ஹீரோவாகவும் நடிகை அல்லது இயக்குனர் தயாரிப்பாளர் என ஏதாவது ஒன்றில் அறிமுகம் ஆனாலும் காலப்போக்கில் தன்னை எல்லாவற்றிலும் ஈடுபடுத்திக்கொண்டு ஒரு கட்டத்தில் சினிமா உலகில் தவிர்க்க முடியாத பிரபலமாக விசுவரூபம் எடுக்கிறார்கள்.

அந்தவகையில் சின்னத்திரை சீரியல்கள் மூலம் தனது பயணத்தை தொடர்ந்து பின் படிப்படியாக வெள்ளித்திரை துறைக்குள் நுழைந்தவர்தான் கவின். தற்போது ஹீரோ என்ற அந்தஸ்த்தையும் தாண்டி உதவி இயக்குனராகவும் பணிபுரிந்து வருகிறார். வெள்ளித்திரையில் முதலில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சத்ரியன் என்ற திரைப்படத்தில் டாக்டராக நடித்திருப்பார்.

அதைத் தொடர்ந்து நட்புனா என்னனு தெரியுமா என்னும் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் அதைத்தொடர்ந்து சமீபத்தில் கவின் நடிப்பில் லிப்ட் என்ற திரைப்படமும் வெளியானது இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது மட்டுமல்லாமல் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி சினிமாவில் ஹீரோவாக நடித்தாலும் மறுப்பக்கம் அசிஸ்டெண்ட் ராகவும் பணியாற்றி வருகிறார்.

அந்த வகையில் டாக்டர், பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை எடுத்து வரும் இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு அசிஸ்டன்ட் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார் சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்திற்கு அசிஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றி உள்ளார் கவியின் அதுபோல தளபதி விஜய்யின்பீஸ்ட் திரைப்படத்தில் இவர் அசிஸ்டெண்ட் ஆக பணியாற்றுகிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளிவந்தன.

பேட்டி ஒன்றில் பேசிய கவின் நான் பீஸ்ட் படத்தில் உதவி இயக்குனராக பணி புரிய வில்லை முதலில் பேச்சுவார்த்தை நடந்தது ஆனால் அதற்கு முன் சில படங்களில் கமிட் ஆகியுள்ளதால்பீஸ்ட் படத்தில் கமிட் ஆக முடியாமல் போய்விட்டது என கூறினார்.