சிம்புவை ஏமாற்றினாரா கௌதம் வாசுதேவ்.? கிழித்து தொங்கவிட்ட பிரபலம்..

simbu
simbu

தொடர்ந்து சில யூடிபர்கள் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களை விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அந்த வகையில் ஒரு பிரபல சேனல் தான் வலைபேசி இதில் மூன்று பேர் தொடர்ந்து வெளிவரும் அனைத்து திரைப்படங்களையும் விமர்சனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அந்த வகையில் தற்பொழுது வெந்து அணிந்தது காடு திரைப்படம் பற்றி கூறியுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சிம்பு நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பற்றி நிலையில் சிம்புவிற்கு பாராட்டுகளும் கிடைத்தது ஏனென்றால் சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த இவர் தொடர்ந்து தற்பொழுது திரைப்படங்களில் நடித்த வருகிறார்.

எனவே இவரை பாராட்டி இருந்தார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்போது வலைப்பேசி சேனல் கூறி இருப்பதாவது சும்மாவே சிம்பு ஒழுங்கா படப்பிடிப்பிற்கு வர மாட்டார் இடையில் காணாமல் போய்விடுவார் முதலில் சம்பளம் இவ்வளவு தான் எனக் கூறிவிட்டு பிறகு அதனை அதிகரித்து வாங்குவதும் உண்டு இப்படிப்பட்ட சிம்பு தன்னுடைய இயக்குனருக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒழுங்காக படப்பிடிப்பிற்கு வந்தார்.

ஆனால் கௌதமேனன் அவரை ரசிக்கிற ரசிகர்களுக்கும் உண்மையாக இல்லை, அவரை நம்பி டேட் கொடுத்த சிம்புவுக்கும் உண்மையாக இல்லை, அவரை நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளருக்கும் நேர்மையாக இல்லை வெந்து தணிந்தது காடு என்ற ஒரு மொக்க படத்தை எடுத்துக் கொடுத்திருக்காரு அதாவது வெந்து தணிந்தது காடு புது படம் கிடையாது நாயகன் போன்ற ஏராளமான திரைப்படங்களை பார்த்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.

இவ்வாறு வலைபேசி சேனலில் இருப்பவர்கள் கூறியுள்ள நிலையில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் சிம்பு சமீப காலங்களாக தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அந்த திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.