தளபதி விஜய் ஆயுதபூஜை கொண்டாடினாரா.? வெளிவந்த வீடியோவால் குழம்பி போய் இருக்கும் தளபதி ரசிகர்கள்.

vijay
vijay

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக  இருந்து வருகிறார். அதற்கு முக்கிய காரணம் இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது தான். சமிப காலமாக இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி உள்ளதால் தற்போது இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் போட்டிபோட்டுக்கொண்டு விஜய்யை கமிட் செய்து வருகின்றனர். தளபதி விஜய் தற்போது தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலிப்குமார் தான் இந்த திரைப்படத்தை இயக்குகிறார் இந்த திரைப்படத்தில் இவர் தற்பொழுது பீஸ்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் எடுத்து வருகிறது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் மீதி படப்பிடிப்புகள் அடுத்தடுத்து எடுக்க படக்குழு முனைப்பு காட்டி வருகிறது அந்த வகையில் அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்காக ரஷ்யா செல்ல இருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் இந்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது இதனால் ரசிகர்கள் தற்போது இந்த படத்தை எதிர் நோக்கி காத்துகொண்டு இருக்கின்றனர். அதற்கு முன்பாக பீஸ்ட்  திரைப்படத்திலிருந்து பாடல் மற்றும் டீசர் ஆகியவை வெளி வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது தளபதி ரசிகர்கள் வேண்டுகோளாக இருக்கிறது. இந்த நிலையில் இன்று ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விதமான மீம்ஸ்களைப் போட்டு வருகின்றனர் மேலும் பிரபலங்களும் ஆயுத பூஜையை முன்னிட்டு புகைப்படம் மற்றும் வீடியோக்களை பிரபலங்கள் வெளியிட்டு சமூக வலைதளப் பக்கத்தில் கொண்டாடி வருகின்றனர் இந்த நிலையில் தளபதி விஜயின் சொகுசு கார் பூஜை கூறப்பட்டுள்ளது விஜய் அவர்களின் கார் செல்லும் வீடியோ  இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருவதை கண்ட ரசிகர்கள் தளபதி விஜய் ஆயுதபூஜை கொண்டாடி விட்டார் என கூறி வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.