பகாசூரன் மோகன் ஜி மீண்டும் விதையை விதைத்தாரா.! இதோ முழு விமர்சனம்..

bakasuran
bakasuran

துரோபதி, ருத்ர தாண்டவம், ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் மோகன் ஜி. இவர் அடுத்ததாக செல்வராகவன் அவர்களை வைத்து பகாசூரன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் செல்வராகவனுடன் இணைந்து தாராக்கி, குணநீதி, நட்டி, உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தின் மூலம் மோகன் ஜி ரசிகர்களை வெகுவாக கலந்தாரா என்பதை இங்கே காணலாம்.

படத்தின் கதை

படத்தில் சிவ பக்தராக வரும் வீமராஜ் ஒரு கல்லூரி ஒன்றின் ஆசிரியர் பெண் ஹாஸ்டல் பொறுப்பாளர் மற்றும் வாட்ச்மேன் என மூன்று பேரையும் அடுத்தடுத்து கொடூரமாக கொலை செய்கிறார். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் ராணுவத்திலிருந்து பணியாற்றி வந்து ஓய்வு பெற்ற வர்மன் என்பவர் youtubeவர்மன் என்பவர் youtube இல் சில வீடியோக்களை பதிவிட்டு தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

இந்த நிலைமையில் தன்னுடைய அண்ணன் மகள் திடீரென தற்கொலை செய்து கொண்டது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது இதற்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார் அப்பொழுது உயிரிழந்த தன்னுடைய அண்ணனின் மகளின் செல் போன் தன்னுடைய கைக்கு வருகிறது. உடனே வருமன் அந்த மொபைலை பரிசோதிக்க அதில் பல திடுக்கிடும் வீடியோக்கள் தகவல்கள் தெரிய வருகிறது. அதுமட்டுமில்லாமல் தன்னுடைய அண்ணன் மகளின் வீடியோவையும் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

இதில் மிகப்பெரிய புள்ளி ஒருவர் சிக்க அந்த விஷயத்தை எப்படியாவது வெளிக்கொண்டு வரவேண்டும் என வருமன் முயற்சி செய்கிறார். இதை எப்படி சமாளிப்பது அதற்காக பீமாவை சந்திக்கிறார் அவர் மூலம்தான் சாத்தியமாகும் என நம்புகிறார் பின்பு வர்மாவுக்கு பீமா உதவினாரா பீமராஜ் அடுத்தடுத்து நடத்திய கொலைகளுக்கான காரணம் என்ன. மொபைல் போனால்எவ்வளவு பிரச்சனைகள் வருகிறது அது கொலை செய்யும் அளவிற்கு எப்படி செல்கிறது என்பதே பகாசுரன் திரைப்படத்தின் கதை.

செல்வராகவன் சாணி காகிதம் என்ற திரைப்படத்திற்கு பிறகு மிகவும் அழுத்தமான ரோல் என்றால் இந்த திரைப்படத்தில் தான் ஆனால் இவர் இந்த கதாபாத்திரத்தை மிகவும் முழுமையாக பயன்படுத்திக் கொண்டாரா என்பதை கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் இந்த கதாபாத்திரத்தில் செல்வராகவன் தன்னுடைய அழுத்தமான நடிப்பை வெளி காட்ட வில்லை பீமராஜ்க்கு இருக்கும் உக்கிரமான பேச்சு நடைபாவனை என அனைத்தும் செல்வராகவனை விட்டு விலகுகிறது.

அதிலும் ஒரு சில இடங்களில் அவர் செய்யும் முகபாவனங்கள் நமக்கு சிரிப்பை வரவழைக்கிறது ஒரு இயக்குனராக அவர் என்னதான் மிரட்டி இருந்தாலும் ஒரு நடிகனாக அவர் இன்னும் அதிக பயிற்சிகள் எடுக்க வேண்டும் என்று தான் கூற வேண்டும் இதில் நட்டி நடராஜ் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார் நட்டி நடராஜ் தன்னால் முடிந்த வரை தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் அற்புதமாக நடித்துள்ளார்.

செல்வராகவனுக்கு மகளாக நடித்துள்ள தாராசி சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார் மேலும் தயாரிப்பாளர் ராஜன், ராதாரவி, கூல் சுரேஷ், என பலரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தில்   நடித்துள்ளார்கள். மோகன் ஜி அவர்கள் திரௌபதி, ருத்ரதாண்டவம் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு நல்ல கதை உள்ள திரைப்படமாக கொடுத்துள்ளார். பகாசுரன் திரைப்படத்தின் கதையை நான் லீனியர் பாணியில் ரசிகர்களுக்கு போரடிக்காமல் கூறியது ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.

பொதுவாக இது போல் உள்ள த்ரில்லர் திரைப்படங்களில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று சஸ்பென்சில் வைத்திருப்பார்கள் அதேபோல் இந்த திரைப்படத்தில் முதல் பாதி அதை நன்றாக மோகன் ஜி கலை பிடித்துள்ளார். அதேபோல் கதாபாத்திரத்தில்  உள்ள அனைத்து நடிகர்களையும் நன்றாக வேலை வாங்கி நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் ஆனால் செல்வராகவனிடம் வேலை வாங்காதது ரசிகர்களிலேயே கொஞ்சம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தத்தில் பகாசுரன் திரைப்படம் மொபைல் போனால் சமூகம் எப்படியான ஆபத்துகளை சந்திக்கிறது என்பதுதான் படத்தின் முக்கிய கரு. எனவே இது போல் சமூக கருத்துள்ள திரைப்படங்களை இயக்கம் மோகன் ஜி அவர்களுக்கு பாராட்டுக்கள்.