சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியாகி வெற்றி நடை கண்டு வரும் திரைப்படம் அண்ணாத்த இந்த திரைப்படம் குடும்பங்களை பெரிய அளவில் கவர்ந்து இழுத்து உள்ளதால் தற்போது இந்த திரைப்படம் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது .
இருப்பினும் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டையும் இந்த படம் பெற்றுள்ளது இருப்பினும் அண்ணாத்த திரைப்படம் 2 நாட்களில் மட்டும் 100 கோடியை அள்ளிய புதிய சாதனை படைத்தது. மேலும் நான்கு நாட்களில் மட்டும் இந்த திரைப்படம் திரையரங்கில் ஹவுஸ்புல்லாக இருந்ததாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
திரைப்படம் தமிழையும் தாண்டி மற்ற மொழிகளிலும் வெளியானது மேலும் வெளிநாட்டிலும் இந்த திரைப்படம் வெளியாகியது இதனால் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டையை அண்ணாத்த திரைப்படம் நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இடையே மழை குறுக்கிட்டது மற்றும் ரசிகர்களை பெரிதும் கவரததால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறையத் தொடங்கியது.
அண்ணாத்த திரைப்படம் ரஜினிக்கு மிக முக்கியமான திரைப்படமாக இருந்தாலும் பெரிய வசூல் வேட்டை இந்த திரைப்படம் கடந்த நாட்களாக நடத்தவில்லை என கூறப்படுகிறது ஆம் இதுவரை 13 நாட்கள் ஆகிய நிலையில் அண்ணாத்த திரைப்படம் இதுவரை 200 கோடி அள்ளியதாக தகவல்கள் கசிகின்றன ஆனால் உண்மையான நிலவரம் அது இல்லை என கூறப்படுகிறது.
அண்ணாத்த வெளிநாட்டில் 45 கோடியும் தமிழகத்தில் 92 கொடியையும் கைப்பற்றி உள்ளது மேலும் தெலுங்கில் ஏழுகோடி, கர்நாடகாவில் 10 கோடியும், கேரளாவில் ரூ 2.5 கோடியும், வட இந்தியாவில் 2 கோடி ஆக மொத்தம் இந்த திரைப்படம் இதுவரை 160 கோடி வரைதான் வசூலித்ததாக கணக்குகள் கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை ஆனால் இதுவரை அண்ணாத்த திரைப்படம் 200 கோடியை கிட்டத்தட்ட நெருங்கியிருக்கிறது தவிர தொடவில்லை என கூறப்படுகிறது.