தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் பணியாற்றி வருபவர் வெங்கட்பிரபு இவர் இயக்கத்தில் இதுவரை பல்வேறு திரைப்படங்கள் ஹிட்டடித்த உள்ளன அதே சமயம் பல்வேறு சிறந்த கதையம்சம் உள்ள படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இப்படி பயணித்து கொண்டிருப்பதால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகனாக வெங்கட்பிரபு இருக்கிறார்.
அண்மையில் இவர் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “மாநாடு” படம் வெளியாகி தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது சிம்பு. தன்னை முற்றிலுமாக மாற்றிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரங்கள் தேர்ந்தேடுத்து நடித்து உள்ளார்.
மேலும் அவரது நடிப்பும் பெரிய அளவில் மாறி உள்ளது. படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை அழகாக கொடுத்திருக்கிறார் சிம்பு மாநாடு திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தார் இவருக்கு ஈடு இணையாக வில்லன் எஸ் ஜே சூர்யாவும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
மாநாடு திரைப்படம் ஆரம்ப நாட்களிலிருந்து தற்போது வரை நல்ல வசூல் வேட்டையை கண்டு வருகிறது. இதுவரை மாநாடு திரைப்படம் 50 கோடியை தொட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இப்படி இருப்பதால் வெங்கட் பிரபு, மற்றும் பட குழுவினர் அனைவரும் செம உற்சாகத்தில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் வெங்கட் பிரபுவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது அதாவது தல அஜித் மாநாடு திரைப்படத்தை பார்த்து விட்டாரா இல்லையா என்று அதற்கு அவர் இன்னும் மாநாடு படத்தை பார்க்கவில்லை அடுத்த வாரத்தில் பார்ப்பார் என உற்சாகமாக பதிலளித்துள்ளார். இச்செய்தி தற்போது இணைய தள பக்கத்தில் வேகம் எடுத்துள்ளது.