நடிகர் விஜய் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த திரைப்படத்தினை வம்சி இயக்கத்தில் உருவாகியிருந்தது. இப்படிப்பட்ட நிலையில் லவ் டுடே திரைப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தினை வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தான் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றினை பெற்ற திரைப்படம் தான் லவ் டுடே. பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவனா நடித்திருந்தார் மேலும் வெறும் ஐந்து கோடி பொருட் செலவில் உருவான இந்த திரைப்படம் வெளியாகி 70 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரிய சாதனை படைத்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் இந்த படம் சமீபத்தில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது என்பதும் அங்கும் வசூல் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பிரதீப் ரங்கநாதன் இதற்கு முன்பு கோமாளி திரைப்படத்தின் இயக்கி இருந்தார். மேலும் இதுதான் அவர் ஹீரோவாக அறிமுகமான முதல் திரைப்படமாகும் முதல் திரைப்படமாக இருந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்துள்ள நிலையில் ஏராளமான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பிரதீப் ரங்கநாதனை அணுகி உள்ளார்கள்.
அந்த வகையில் தெலுங்கு தயாரிப்பாளர் பிரதீப் ரங்கநாதனை அணுகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அதாவது தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படத்தின் இயக்கிய தில்ராஜ் பிரதிபிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தயாரிக்கும் அடுத்த படத்தை பிரதிப் ரங்கநாதன் தான் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது இதனை குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பிரதீப் ரங்கநாதன் நடிகர் விஜயை சந்தித்து கதை கூறியதாகவும் அந்த கதை விஜய்க்கு பிடித்துள்ளதாகவும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். எனவே தற்பொழுது நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் இணைய இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் பிரதிப் ரங்கநாதன் உடன் கைகோர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.