தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துரு விக்ரம் இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றியும் தோல்வியும் அடைந்துள்ளது. அதிலும் விக்ரம் திரைப்படம் என்றாலே ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் அதனால் எப்படி இருந்தாலும் விக்ரம் திரைப்படத்தை பார்ப்பதற்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள் ரசிகர்கள். அதற்கு காரணம் விக்ரம் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் என்றால் அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவார் தன்னையும் மாற்றிக் கொள்வார்.
அப்படி தான் பல திரைப்படங்களில் நடிப்பதற்காக தனது உடல் உருவத்தையே தாறுமாறாக மாற்றிக் கொண்டவர் விக்ரம். ஆரம்ப காலகட்டத்தில் விக்ரம் பல தோல்வி திரைப்படங்களை கொடுத்து வந்தார் பின்பு பாலா இயக்கத்தில் பிதாமகன் என்ற திரைப்படத்தில் நடித்து வெற்றி பெற்றார் அதேபோல் சேது திரைப்படம் விக்ரம் சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது.
விக்ரம் ஆரம்ப காலத்தில் நேரடியாக பெரிதாக எந்த உதவியும் இல்லாமல் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்தை பிடித்தார். அப்படி இருக்கும் நிலையில் தனது மகன் இதுபோல் கஷ்டப்பட கூடாது என்பதற்காக விக்ரம் பல வழிகளில் உதவி வருகிறார் ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் துருவ் விக்ரம் அவர்களுக்கு சினிமா பிரபலங்கள் மூலம் பல்வேறு வரவேற்புகள் கிடைத்தது. இந்த நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தில் விக்ரம் மற்றும் அவருடைய மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்து வருகிறார்கள்.
கார்த்திக் சுப்புராஜ் திரைப்படம் என்றாலே ரசிகர்களிடம் ஓரளவு எதிர்பார்ப்பு இருக்கும் இதனை தொடர்ந்து அப்பா மகன் என்ற பந்தத்துடன் படத்தில் விக்ரம் மற்றும் துரு விக்ரம் எப்படி நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது அதனால் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது இருவருக்கும் என்ன கதாபாத்திரம் என்பது புரியாத புதிராக இருந்து வருகிறது.
இந்த நிலையில் துரு விக்ரம் அடுத்ததாக மாரிசெல்வராஜ் திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார் அதுமட்டுமில்லாமல் புதுமுக இயக்குனர் ஒருவர் கதை கூறவே அந்த கதையும் பிடித்துவிட்டதால் துரு விக்ரம் அதிலும் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம் அதனால் தொடர்ந்து மூன்று திரைப்படங்களில் துருவ் விக்ரம் நடிக்க இருக்கிறார்.