அப்பாவின் டயலாக்கை பேசி அரங்கை அதிர வைத்த துருவ் விக்ரம்.! எல்லாமே அவளை மறக்கத்தான்.. என்னை மறக்கத்தான்

dhuru-vikram
dhuru-vikram

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒரு திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறது அது மட்டுமல்லாமல் இந்த படம் வசூலில் சாதனை படைத்தும் வருகிறது.

மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியான இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது கல்கியின் நாவலை தழுவி உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி தற்போது வரையிலும் திரையரங்குகளில் கூட்டம் குறையாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இதில் விக்ரம் அவர்கள் ஆதித்ய கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர்.

மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம் அவர்கள் ஒரு ஆக்ரோஷமான ஒரு டயலாக்கை பேசி இருப்பார் அதாவது எல்லாம் அவளை மறக்கத்தான் என்னை மறக்கத்தான் என்று ஆக்ரோஷமாக பேசியிருப்பார். இந்த வசனத்தை பிசிறு தட்டாமல் விக்ரம் மகனான துருவ் விக்ரம் அவர்கள் ஒரு மேடையில்  இதே வசனத்தை பேசி அரங்கத்தை ஆதரவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

மேலும் துருவ் விக்ரம் அவர்கள் தனது அப்பாவான விக்ரம் நடிப்பில் வெளியான மகான் திரைப்படத்தில் இவர்கள் இருவருமே நடித்திருப்பார்கள். அதனைத் தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரம் தற்போது கபடி போட்டியை மையமாக வைத்து உருவாகும் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இவர் பேசி இந்த வசனம்தான் சோசியல் மீடியாவில் தியாக பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ…