தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் சமீப காலங்களாக நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி விடுகிறது. இந்நிலையில் இவருக்கு பெண் ரசிகர் பட்டாளமே அதிகம்.
ஏனென்றால் இவர் பட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொழுது பேட்டியில் பெண்களை மதிக்க வேண்டும் என்பதை பல இடங்களில் பலமுறை கூறி உள்ளார். எனவே அண்ணா என்ற அந்தஸ்துடன் பெண் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தின் மூலம் விஜய்சேதுபதி வில்லனாக சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இன்னும் பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் உப்பண்ணா.
இவ்வாறு விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி இந்த முன்று திரையுலகிலும் நடித்து கலக்கி வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் சில திரைப்படங்கள் தமிழில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் விஜய் சேதுபதியை நடிகர் துருவ் விக்ரம் சமீபத்தில் சந்தித்துள்ளார். அவ்வப்பொழுது இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அப்பொழுது துருவ் விக்ரம் தனது அப்பா படமான சியான் 60 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.