தனது அப்பாவை விட கரடுமுரடாக உடலை ஏற்றிய துருவ் விக்ரம்.! இணையதளத்தை தெறிக்க விடும் புகைப்படம்.!

vikram

சமீப காலமாக இந்திய சினிமாவில் நடிகர்களின் வாரிசுகளை சினிமாவில் நுழைப்பது புதிதான விஷயமல்ல, காலங்காலமாக நடைபெற்று வருகிறது, ஆனாலும் என்னதான் வாரிசு நடிகர்களை நுழைந்தாலும் அவர்களுக்கு திறமை இருந்தால் மட்டுமே அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க முடியும் இல்லை என்றால் சினிமாவை விட்டு விலகி விடுவார்கள்.

அந்த வகையில் தனது மகன்களை பல நடிகர்கள் சினிமாவில் இறக்கி ஹிட் கொடுக்க பார்க்கிறார்கள் அந்த லிஸ்டில் சியான் விக்ரம் தனது மகனை வைத்து தெலுங்கில் ஹிட்டடித்த அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்து ரீமேக் செய்தார்.

முதலில் விக்ரமின் ஆஸ்தான இயக்குனர் பாலாவை வைத்து வர்மா என ரீமேக் செய்தார் ஆனால் சில பிரச்சினைகளால் அந்த திரைப்படம் கைவிடப்பட்டது அதன்பிறகு அறிமுக இயக்குனரைவைத்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் படத்தை இயக்கி முடித்து ரிலீஸ் செய்தார்கள்.

ஆதித்யா வர்மா படம் வெளியாகி துருவ் விக்ரமுக்கு பிரபலத்தை தேடிக் கொடுத்தது, அதுமட்டுமில்லாமல் துருவ் விக்ரம் ஹீரோவாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் மக்கள், அதனால் மக்களிடம் நல்ல பிரபலமாகிவிட்டார், இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் திரைப்படத்தில் அடுத்ததாக துருவ் விக்ரம் நடிக்க இருக்கிறார்.

ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக படப்பிடிப்பு இன்னும் கிடப்பில் கிடக்கிறது இந்த திரைப்படத்தில் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், அப்பா மகன் இருவரும் ஒரே திரைப்படத்தில் இணைய இருப்பதால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு நீடித்து வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் விக்ரம் மற்றும் துரு விக்ரம் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் உடல் எடையை தாறுமாறாக ஏற்றி மாரி மாரி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் துருவ் விக்ரம் தற்போது உடல் எடையை கரடுமுரடாக ஏற்றி ஐ பட விக்ரம் போல் முரட்டுத்தனமாக போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் இணையதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது அதுமட்டுமில்லாமல் டிரெண்டிங்கில் அடித்து தூக்கி வருகிறது.

Dhruv-Vikram-1
Dhruv-Vikram-1