தல தோனி படத்தில் நடிப்பதற்காக விஜய்யிடம் வாய்ப்பு கேட்டு அதற்கு நடிகர் விஜய் நோ என சொல்லி இருக்கும் நிலையில் அது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக இருந்தவரும் தோனி தொடர்ந்து கிரிக்கெட் உலகில் சாதனை படைத்து வருகிறார் எனவே இவர் மூலம் இந்தியாவிற்கு பெருமையும் சேர்ந்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் 2023 காண ஐபிஎல் மேட்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இது ஐந்தாவது முறை கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏராளமான சாகசங்களை படைத்திருக்கும் தோனியின் வாழ்க்கையை படமாக வெளியிட வேண்டும் என சில ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது எனவே ரசிகர்களும் அதற்காக ஆர்வமுடன் இருந்து வருகின்றனர்.
இதனை அடுத்து ஹீரோக்களை விட ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் தல தோனி விரைவில் சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என ரசிகர்கள் விரும்பி வந்தனர். அந்த வகையில் தற்பொழுது சினிமாவில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் நிலையில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவ்வாறு தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பக்தி ஆஃ தி லயன், ப்ளேஸ் டு குளோரி மற்றும் தி ஹிடன் ஹிந்து ஆகிய சின்ன பட்ஜெட் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இதனை அடுத்து தமிழில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஒரு படத்தினை எடுக்க இருக்கிறாராம் அந்த படம் பல மொழிகளில் வெளியிட இருப்பதாகவும் அந்த படத்தின் கதையை தோனியின் மனைவி சாக்ஷியே எழுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அந்த படத்தை 3டி முறையில் எடுக்க முடிவு செய்திருக்கும் நிலையில் அந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்க உள்ளார். இந்த படத்திற்கு Let’s Get married என தலைப்பு வைத்திருக்கும் நிலையில் இதில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்க இவருக்கு ஜோடியாக நடிகை இவனா நடித்து வருகிறார். மேலும் இதனை தொடர்ந்து நதியா, யோகி பாபு இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தல தோனி தயாரிக்கும் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது முதலில் தோனி அவர்கள் விஜய்யை சந்தித்து lgm படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு இருக்கிறார். அதற்கு விஜய் யோசித்து சொல்கிறேன் என சொன்னாராம் ஆனால் அதற்குப் பிறகு விஜய் படத்தில் நடிப்பது குறித்து எந்த ஒரு பதிலையும் சொல்லவில்லை தோனியும் இனிமேல் காத்திருக்க வேண்டாம் என ஹரிஷ் கல்யாணி ஹரிஷ் கல்யாணை வைத்து படத்தினை தயாரிக்க முடிவெடுத்தாரம்.