பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்கப் போகும் தோனி.! இதோ புகைப்படத்துடன் அதிகாரபூர்வ அறிவிப்பு.

dhoni

தல தோனி அவர்கள் என்னுடைய படத்தில் நடிக்கப் போகிறார் அதன் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பிரபல இயக்குனர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு தோனி ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் நடிகர் விக்னேஷ் சிவன் இவர் நயன்தாராவின் காதலர் கூட. முதன் முதலில் தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன் அதனை தொடர்ந்து நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.

இப்படித் தான் இயக்கிய திரைப்படங்கள் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றதால் தற்பொழுது நயன்தாரா மற்றும் சமந்தா விஜய்சேதுபதி அவர்களை வைத்து காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.

காற்று வாக்கில் இரண்டு காதல் திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைதள பக்கம் ஆன இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னுடைய ரோல் மாடல் தல தோனியை சந்தித்த தருணத்தை வார்த்தைகளால் கூற முடியாது என்றும் என்னுடைய இயக்கத்தில் தோனி நடிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் பதிவு செய்துள்ளார்.

ஒருவேளை முழு படத்தில் நடிக்கப் போகிறாரா அல்லது தோனி நடிக்கும் விளம்பர திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போகிறாரா என்பது தெரியவில்லை. தோனியின் தீவிர ரசிகராக இருக்கும் விக்னேஷ் சிவன் தோனி திரைப்படத்தை இயக்க போகிறார் என்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

இந்த நிலையில் விக்னேஸ் வெளியிட்ட அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.

dhoni vikki
dhoni vikki