Dhoni : கிரிக்கெட் உலகில் தலைசிறந்த வீரரான தோனி வயது முதிர்வின் காரணமாக ஓய்வை அறிவித்தார் இருந்தாலும் ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டனாக தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறார். இப்படிப்பட்ட தோனி சினிமா படங்களை தயாரிக்கவும் முடிவு எடுத்துள்ளார்.
முதலாவதாக LGM என்ற படத்தை முதிலில் உருவாக்கியுள்ளார் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரைலர் போன்றவை வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றது. படத்தின் கதை.. மாமியார் மற்றும் மருமகள் பிரச்சனையை பற்றி இந்த படம் காமெடியாகவும் அதே சமயம் சீரியஸாகவும் எடுத்து சொல்லும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீடு விழாவில் தோனி சென்னை வந்திருந்தார். விளம்பர படங்களில் நடிக்கும் தோனி எல் ஜி எம் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின இது குறித்து ஹீரோ ஹரிஷ் கல்யாண்னிடம் கேள்வி எழுவினர்.
அந்த சர்ப்ரைஸை சொல்லிவிடக் கூடாது என்பதற்காக ஜூலை 28ஆம் தேதி தியேட்டரில் வந்து பார்த்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டார். இதனால் தோனி கேமியோ ரோலில் நடித்துள்ளதாக பலரும் நம்புகின்றனர் ஆனால் தோனி ரசிகர்கள் இதை நம்ப மறுக்கின்றனர்.
காரணம் அதையெல்லாம் அவர் பெரிதாக விரும்ப மாட்டார் என்றும், படம் தன்னால் ஓடாமல் கதைக்காக ஓடினால் போதும் என்று நினைப்பவர் என்றும் அவரது ரசிகர்களே.. இந்த படத்தில் தோனி கேமியோ ரோலில் நடுத்திருக்க மாட்டார் என உறுதியாக கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.