நேற்றைய போட்டியில் நடுவர் அவுட் இல்லை எனக் கூறியவுடன் டோனி ரிவ்யூ கேட்டார் உடனே மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் அடுத்த நிமிடமே நடையை கட்டினார் இந்த நிலையில் தோனி ரிவ்யூ சிஸ்டம் என்னும் ஹேஷ் டேக் சமூக வலைதளத்தில் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது.
நேற்று தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோகித் சர்மா தலைமையில் ஆனா மும்பை இந்தியன்ஸ் அணியும் நேருக்கு நேராக மோதிக்கொண்டன இது 12-வது லீக் போட்டி இந்தப் போட்டி மும்பையில் உள்ள வன்கடெ என்ற மைதானத்தில் நடைபெற்று வந்தது இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தார்கள் இதில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் ஓபனிங் செய்தார்கள் இருவரும் மிகவும் சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினார்கள் ரோகித் சர்மா 13 பந்துகளில் ஒரு சிக்ஸ் மற்றும் மூன்று பவுண்டரிகள் அடித்து 21 ரன்கள் ஆக்ரோஷமாக விளையாடியனர் அப்பொழுது துஷார் தேஷ் பாண்டே பந்தில் ஆட்டம் இழந்தார் இதனைத் தொடர்ந்து இஷான் கிஷான் அதிரடியாக விளையாடியதால் பவர்ஃபிளே ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி 61 ரன்கள் அடித்திருந்தது அதே சமயத்தில் உள்ளே வந்த இஷான் கிஷான் விக்கெட்டை தூக்கினார் ஜடேஜா.
21 பந்துகளில் 5 பவுண்டரிகள் உட்பட 32 ரன்கள் இஷான் கிஷான் நடித்திருந்தார் இதனைத் தொடர்ந்து உள்ளே வந்த சூரியகுமார் யாதவ் ஸ்பின்னர் சான்ட்னர் பாலில் அடிக்க முயற்சி செய்தபோது தோனி அதனை பிடித்து அவுட் கேட்டார் ஆனால் நடுவர் அவுட் இல்லை என கூறிவிட்டார் அடுத்த நிமிடமே தோனி ரிவ்யூ கேட்டார் இதனை தெரிந்து கொண்ட சூரியகுமார் ரிவியூ வருவதற்கு முன்பே நடையை கட்டினார் அதன் பின்னர்தான் மூன்றாவது நடுவர் அவுட் என்பதை உறுதி செய்தார்.
சூரியகுமார் ஒரு ரன்களில் ஆட்டம் இழந்தார் அவரைத் தொடர்ந்து கேமரு கிரீன் 12 ரன்களளில் ஆட்டம் இழந்தார் . இப்படி அடுத்தடுத்த பந்தில் ஆட்டம் இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 76 ரன்களுக்கு 5 விக்கெட் களை இழந்து பரிதாபமாக இருந்தார்கள் பின்பு கடைசியாக 157 ரன்னுக்கு 8 விக்கெட் இறப்பிற்கு 20 ஓவர் முடிவு செய்தார்கள். 158 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த நிலையில் 18.1 ஓவரில் மிக எளிமையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதோ வீடியோ
Dhoni Review System™️ for a reason 😎#MIvCSK #TATAIPL #IPLonJioCinema pic.twitter.com/CkhN6bp61H
— JioCinema (@JioCinema) April 8, 2023