Dhivyadharshini : பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி ‘திவ்யதர்ஷினி’ அவர்கள் சில தமிழ் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் ‘ஜோடி நம்பர் ஒன்’, ‘சூப்பர் சிங்கர்’ போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார்.
2014 இல் இவருக்கும் தனது நீண்ட கால நெருங்கிய நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் நடைபெற்ற சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இவர்களுக்கு 2017 இல் விவாகரத்து நடைபெற்றது.
அதிலிருந்து டிடி தனிமையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் தற்போது இவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக பல்வேறு சோசியல் மீடியாக்களால் பேசப்பட்டு வருகிறது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் டி டி அவர்கள் எனக்கு இரண்டாவது திருமணம் நடைபெற போவதாக இருந்தால் எப்படியும் வெளியே தெரியத்தான் போகிறது இதை யாராலும் மறைத்து வைக்க முடியாது. திருமணம் என்பது ஒரு சாதனை அல்ல, எல்லோருக்கும் திருமணம் என்பது அவசியமும் இல்லை, பத்து வருடத்திற்கு முன்பு திருமணத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லை.
ஆனால் தற்போது திருமணத்தைப் பற்றிய புரிதல் என்னிடம் தெளிவாகியிருக்கிறது. “என்னுடைய வாழ்க்கை என்னுடைய விதி”. சோசியல் மீடியாவில் என்னைப் பற்றி வரும் வதந்திகளைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன். நான் எப்படிப்பட்டவள் என்று எனக்கு தெரியும் நீங்கள் சான்றிதழ் கொடுக்க வேண்டாம் என்று பதிலடி கொடுத்துள்ளார்.