தம்பி சூர்யாவுக்கு இருக்க தில்லு விஜய்க்கு இல்லையே..! தளபதி விஜய்யை பேட்டியில் தரக்குறைவாக பேசிய சீமான்..!

seeman-3

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தான் சூர்யா மற்றும் விஜய் இவ்வாறு பிரபலமான இந்த நடிகர்களைப் பார்த்து சூர்யாவிற்கு இருக்கும் தைரியம் விஜய்க்கு இல்லை என சீமான் கூறிய வார்த்தையின் மூலமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து விட்டது.

நாம் தமிழர் கட்சியை தலைமை தாங்கி வருபவர்தான் சீமான் அரசியல்வாதி மட்டுமன்றி சிறந்த இயக்குனர் மற்றும் நடிகர் என்று கூட சொல்லலாம் அந்த வகையில் இவர் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சீமானிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.

அப்பொழுது முல்லைப் பெரியாறு பற்றி பேசுவதற்கு எந்த தமிழ் நடிகரும் இல்லையா என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். இதற்கு நீங்களே முன் வாதத்தை வைக்கலாமே என்று அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இதற்கு பதிலளித்த சீமான் என்கூட நடிக்கவே பலரும் அச்சப்படுகிறார்கள்.

இவ்வாறு என்னை பார்த்து பலரும் பயப்படும் நிலையில் நடிகர் கார்த்திக் மட்டும்தான் என்னுடன் வன பாதுகாப்பு பற்றி குரல் கொடுத்துள்ளார். அதேபோல கல்விக் கொள்கை பற்றி தம்பி சூர்யா அவர்களும்  என்னுடன் குரல் கொடுத்துள்ளார். தம்பி சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் பார்த்தேன் இந்த திரைப்படம் மிகவும் அற்புதமாக இருக்கிறது அந்த இயக்குனரும் மிக திறமையாக இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் உண்மையாக சொல்லப்போனால் இந்த திரைப்படத்தை எடுப்பதற்கு தைரியம் வேண்டும்.

seeman-1
seeman-1

அந்தவகையில் தமிழில் இப்படி ஒரு திரைப்படம் வெளியானது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தம்பி சூர்யாவை போல வேறு யாரும் இப்படி முயற்சி செய்வார்களா என்றால் அது சந்தேகம்தான். ஏனெனில் மற்ற நடிகர்களுக்கு எல்லாம் தைரியம் கிடையாது.

பொதுவாக தமிழ் சினிமாவில் தற்போது தளபதி என கொண்டாடப்படும் விஜய் துணிந்து பேச வேண்டும் அவர் எவ்வளவு உயரத்தில் இருக்கிறார் என்பது அவருக்கே தெரியாமல் பயந்து கொண்டிருக்கிறார் ஏன் இந்த பயம் இது உன் நாடு உன் மக்கள் அவர்களுக்காக இறங்கி வர மாட்டீர்களா. அதுமட்டுமில்லாமல் விஜய் பிரச்சனைக்கு கூட நான்தான் போய் மல்லுக்கட்ட வேண்டியதாக இருக்கிறது ஏன் இப்படி பயப்படுகிறீர்கள் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

seeman-2

இதனை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் சீமானை விமர்சித்து வருவதை வழக்கமாக வைத்து உள்ளார்கள் ஆனால் இது ஒன்றும் புதிதல்ல. அதுமட்டுமில்லாமல் விஜய் அரசியலுக்கு வந்தால் தன்னுடைய எதிர்காலத்தை பாதிக்கும் என்று பயந்துதான் சீமான் இப்படி பேசுகிறார் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அந்தவகையில் விஜய் மக்கள் இயக்கமானது உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி கண்டது பல்வேறு கட்சிக்காரர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் நாம் தமிழர் கட்சி டெபாசிட் கூட இல்லாமல் இழந்து நின்றது. இந்நிலையில் விஜய் தரப்பினரிடமிருந்து எந்தவிதமான வார்த்தை வரப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.