கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் தர்ஷன். பிக்பாஸில் இருந்து வெளியே வந்த இவருக்கு மேலும் பல பிரச்சனைகள் தொடர்ந்து வந்தன.
குறிப்பாக தனது காதலியான சனம் ஷெட்டி இடம் விருந்து பிரச்சனைகள் வலுப்பெறத் தொடங்கின. தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி இருவரும் ஊடகங்கள் முன்பு ஒருவரை ஒருவர் குறை கூறி வந்து வந்திருந்தனர். இந்தநிலையில் தர்ஷன் அவர்கள் தன்னுடைய முகநூலில் நீண்ட பதிவினை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
இதில் மகிழ்ச்சியில்லாத உறவில் இருப்பது கடினம், தனித்தனி வழியில் செல்வதே சரியானது.எனக்கு அவர் மீது ( சனம் ) மரியாதை இருந்தது. ஆனால் தற்போது அவை குறைந்து விட்டன, என்னை பற்றி அறியாத மக்கள் மத்தியில் என் கேரக்டரை விசாரணைக்கு நிறுத்தி விட்டனர். என்னை அழிக்க பார்க்கிறார்கள்.
நான் தற்போது என்னுடைய எதிர்கால வாழ்க்கையில் கவனம் செலுத்த உள்ளேன். இதில் இருந்து நான் பாடம் கற்று கொண்டேன் எனவும் கூறியுள்ளார். என்னுடன் துணை நின்றவர்களுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
இதற்க்கு ரசிகர்கள் தர்ஷனை தாறுமாறாக திட்டி வருகிறார்கள்.