தற்பொழுது கொரோனாவின் தாக்கம் அதிகளவில் இருந்து வருவதால் தொடர்ந்து பலரும் உயிரிழந்து வருகிறார்கள்.அதோடு இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் முதலிடம் வகித்து வருகிறது. இதன் காரணமாக முழு ஊரடங்கு போட்டுள்ளதால் தினக்கூலிகளுக்கு, ரோட்டோறோம் வசித்து வருபவர்கலுக்கும் மிகவும் சிரமமாக அமைந்துள்ளது.
கொரோனா ஒருபுறம் அழித்து வர மற்றொருபுறம் பசியும் பட்டினியினாலும் பலர் அவதிப்பட்டு வருகிறார்கள். இதன் காரணமாக பலரும் பசியால் தவித்து வருபவர்களுக்கு தொடர்ந்த தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அந்தவகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த முள்ளும் மலரும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தர்ஷா குப்தா.
இந்த சீரியலை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து சமீபத்தில் முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் சில நடுவர்களில் ஒருவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் தனியார் பவுண்டேசன் மூலம் தெருவோரம் பசியினால் வாடி வரும் பலருக்கும் தன்னால் முடிந்த உணவுகளை தயாரித்து பல நாட்களாக உதவி வருகிறார்.
எனவே நாள்தோறும் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் மக்களுக்கு உணவளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர் ஒருவர் உதவி செய்வது ஒரு நல்ல விஷயம் தான் ஆனால் ஏன் அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விளம்பரம் படுத்திறீங்க என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த தர்ஷா குப்தா இவ்வாறு நான் செய்வதை பார்த்து ரசிகர்களும் இதேபோல் மற்றவர்களுக்கு உதவுவார்கள் ஒரு ஊக்குவிக்கும் போட்டோவாக இது அமையும் என்பதற்காகதான் என்று பதில் கொடுத்துள்ளார்.