தற்பொழுது உள்ள பல தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு நல்ல தரமான கதை உள்ள பல சீரியல்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் இந்த மூன்று தொலைக்காட்சிகளும் தான் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது. அதோடு இந்த தொலைக்காட்சிகளின் மூலம் கவர்ச்சியில் ஆர்வம் உள்ள பல புதுமுக நடிகைகளை அறிமுகமாகி வருகிறார்கள்.
அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த முள்ளும் மலரும் சீரியலின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமானவ ர்தான் நடிகை தர்ஷா குப்தா. இந்த சீரியலில் நடித்த பொழுது இவர் குடும்ப பெண் போல் ஏன் குடும்ப பெண்ணுக்கு எடுத்துக்காட்டு என்றால் இவரை தான் கூற வேண்டும்.
இதன் மூலம் பிரபலமடைந்த இவர் விஜய் டிவிக்கு அறிமுகமானார். அந்த வகையில் தற்போது இவர் செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொள்ள வேண்டுமென்பதற்காக கவர்ச்சியில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பலரையும் ஓவர்டேக் செய்யும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க வைத்தார்.
இவரின் புகைப்படத்தின் மூலம் தான் புடவையிலும் இப்படி கவர்ச்சி காட்ட முடியும் என்பது ரசிகர்களுக்கு தெரியவந்தது. இவ்வாறு இவர் காட்டும் கவர்ச்சிக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமா என்ன தற்போது இவர் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார் அதற்கான டப்பிங் வேலைகளை செய்து வருவதாக சமீபத்தில் கூறியிருந்தார்.
அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் 9 போட்டியாளர்களில் ஒருவராக பங்கு பெற்றார். இதில் இவர் வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார் இதனை தொடர்ந்து தற்போது இவர் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தனது ஹேர் ஸ்டைலை மாற்றி மாடர்ன் உடையில் ஸ்டைலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.