கவர்ச்சியை வாரி வழங்கிய தர்ஷா குப்தாவா இப்படி கண்ணீர் விட்டு கதறி அழுவது.! வைரலாகும் வீடியோ

dharsha-gupta
dharsha-gupta

சினிமா நடிகைகளை காட்டிலும் சீரியல் நடிகைகள் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்கள்.  அதிலும் சமீபகாலமாக நடிகைகள் தான் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்பை தேடி வந்தார்கள் ஆனால் இப்போது சீரியல் நடிகைகளும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குதுகல படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் விதவிதமாக போட்டோ எடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டு வருகிறார்கள்.  அந்த லிஸ்டில் ரம்யா பாண்டியன், தரஷா குப்தா, ஷிவானி நாராயணன், என பல நடிகைகளும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.

முள்ளும் மலரும் என்ற சீரியலில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடித்து வருபவர் தர்ஷகுப்தா சன் தொலைக்காட்சியின் மின்னலே என்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் செந்தூரப்பூவே என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லாக் டவுனுக்கு முன்பு தர்ஷா குப்தா அவர்களுக்கு 25 ஆயிரத்து குறைவாகவே பாலோவர்ஸ் இருந்தார்கள்.

ஆனால் அதன்பிறகு நடத்திய போட்டோ ஷூட் மூலம் 10 லட்சத்தை தாண்டி விட்டார்.  அதேபோல் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பிரமோஷன் செய்வதாக கூறி பல லட்சத்தை ஏமாற்றிவிட்டதாக ரசிகர்கள் திட்டி தீர்த்தார்கள்.  இதுகுறித்து வீடியோ ஒன்றை தொகுத்து வெளியிட்டார் அதில்  யாருடைய பணத்தையும்  நான் ஏமாற்றவில்லை என்னிடம் சிலர் தங்களுடைய புடவை கமல் போன்றவற்றைச் விளம்பரம்  செய்யச் சொல்லிக் கேட்பார்கள் ஆனால் அவர்கள் சொல்லும் நேரத்தில் என்னால் வீடியோ போட முடியாது என்பதால் நான் என் விருப்பத்திற்கு தான் வீடியோ போடுவேன் அது எல்லாம் நான் பணம் வாங்காமல் இலவசமாக தான் செய்து கொடுத்தேன்.

உண்மை தெரியாமல் யாரையும் அசிங்கமாக பேச வேண்டாம் என கதறி கதறி அழுது வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் தர்ஷா குப்தா  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் அதேபோல் ருத்ர தாண்டவம் படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது ஹீரோயினாக வலம் வர இருப்பதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரும் எனவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் இடத்தை பிடிப்பார் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.