அடுத்த பாகத்தில் அடியெடுத்து வைக்கும் தர்மதுரை திரைப்படம்..! ஆனா ஹீரோ விஜய் சேதுபதி கிடையாதாம்..!

dharmadurai
dharmadurai

தமிழ் சினிமாவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பாக ரஜினி நடிப்பில் தர்மதுரை என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய சாதனை படைத்தது. அந்த வகையில் அதே டைட்டிலை வைத்து சீனு ராமசாமி என்ற இயக்குனர் விஜய் சேதுபதி மற்றும் தமன்னா ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கினார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையைப் படைத்தது இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளரான  ஆர்கே சுரேஷ் அவர்கள்தான் தயாரித்திருந்தார்.

இவ்வாறு பிரபலமான நமது தயாரிப்பாளர் பாலாவின் இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரையில் முகம் காட்ட ஆரம்பித்தார் இந்நிலையில் ஆர்கே சுரேஷ் சமீபத்தில் வேட்டை நாய் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த கையோடு தர்மதுரை இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளதாக ஆர்கே சுரேஷ் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது ஆனால் இயக்குனர் சீனு ராமசாமி உடன் இவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக இந்த திரைப்படத்தை வேறு ஒரு இயக்குனர் இயக்க போகிறார் என தெரியவந்துள்ளது.

மேலும் இந்த திரைபடத்தில் ஆர்கே சுரேஷ் தயாரிப்பாளராக மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் நடிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது இவர் ஏற்கனவே பில்லா பாண்டி என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.  இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் விஜய் சேதுபதி சமீபத்தில் மிக பிஸியாக பல திரைப்படங்களில் நடித்து வருவதன் காரணமாக தர்மதுரை இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கான நேரம் இல்லை ஆகையால் ஆர்கே சுரேஷ் தானே நடிக்க முடிவு செய்துவிட்டாராம்.