தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த், ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைக்கும், இவர் தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெரிய பட்ஜெட் திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் அவருடன் இணைந்து பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
படத்தில் கீர்த்தி சுரேஷ் நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியானது, சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வெளியாகிய திரைப்படம் தர்பார் இந்த திரைப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்றது, திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் போது நடிகை ஸ்ரேயா கலந்து கொண்டுள்ளார் அப்பொழுது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் முருகதாஸ், ரஜினி, ஸ்ரேயா, பீட்டர் ஸின் ஆகியோர்கள் இருக்கிறார்கள்.