வெள்ளித்திரையில் மிகவும் சிறந்த நடிகராக தற்பொழுது வலம் வரும் நடிகர் தான் தனுஷ் இவரது திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதால் இவரது நடிப்பில் நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இவரது நடிப்பில் வெளியாகும்.
சில திரைப்படங்கள் விருது பெற்று விடுவதால் இவரை வைத்து திரைப்படங்களை இயக்க பல இயக்குனர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.அந்தவகையில் தனுஷ் தற்போது ஒரு சில திரைப்படங்களில் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் கூட இவர் நடிக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் இருந்து வெளிவந்த புகைப்படங்களை நாம் பார்த்திருக்கலாம் இன்று விநாயக சதுர்த்தி முன்னிட்டு பல சினிமா பிரபலங்களும் பலவிதமான வாழ்த்துக்களை தெரிவித்து பலவிதமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.
அதேபோல் தற்பொழுது தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உண்மையான யானையிடம் ஆசீர்வாதம் வாங்கிய புகைப்படத்தை பதிவிட்டு விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக இந்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
மேலும் நடிகர் தனுஷ் தற்போது மாறன் திரைப்படத்தை முடித்துவிட்டு திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்து வருவதால் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது முடியும் என பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே தனுஷ் நடிப்பில் அந்த ராங்கி ரே என்ற திரைப்படம் உருவாகி ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.