தனுஷின் வாத்தி திரைப்படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட பிரபலம்.! ரசிகர்கள் கொண்டாட்டம்

vaathi
vaathi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்ட நடிகர் தனுஷ்  இவர் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இதனை தொடர்ந்து தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கடுமையான விமர்சனத்தை பெற்றது. பொன்னியின் செல்வன் திரைப்படத்துடன் மோதியதால் நானே வருவேன் திரைப்படம் கடுமையான விமர்சனத்தை பெற்று தோல்வியை சந்தித்தது.

தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் வாத்தி இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என தனுசு ரசிகர்கள் காத்திருக்கின்றனர் இந்த நிலையில் வாத்தி படம் குறித்து ஒரு தகவல் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தின் இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் அவர்கள் வாத்தி படம் குறித்து ஒரு அப்டேட் வெளியிட்டு உள்ளார்.

அதாவது இந்த படத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் பாடலை எழுதி பாடியுள்ளாராம் அதுதான் இந்த படத்தின் முதல் பாடல் என்று கூறியுள்ளனர். அது மட்டுமல்லாமல் அந்த பாடல் ஒரு காதல் பாடலாக அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார் ஜி.வி பிரகாஷ்.

தனுஷ் எழுதிய பாடல்களில் பல ஹிட் பாடல்களும் உள்ளது அந்த வரிசையில் வாத்தி படத்தில் அமைந்துள்ள பாடலும் இடம்பெரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்கள் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தின் பட பிடிப்பு தற்போது தொடங்கிய நடைபெற்று வருகிறது. மேலும் கேப்டன் மிலர் திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என  தகவல் வெளியாகி உள்ளது அதே நேரத்தில் மணிரத்தினம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.