அனைத்து ஏரியாவிலும் வசூல் வேட்டையாடும் தனுஷின் “திருச்சிற்றம்பலம் படம்” – 4 நாட்களில் மட்டுமே இத்தனை கோடியா.?

dhanush
dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருபவர் தனுஷ் இவர் சிறந்த இயக்குனர்களுடன் கதை கேட்டு படங்களின் நடிப்பது வழக்கம். அந்த வகையில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருந்த தனுஷ் கடைசியாக நடித்த இரண்டு திரைப்படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன.

இதிலிருந்து மீண்டு வர நடிகர் தனுஷ் அனுபவம் வாய்ந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து பணியாற்றி வருகிறார். அந்த வகையில் மித்ரன் ஜவகர்  உடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் திரைப்படம் திரையரங்கில் வெளியானதால் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு இந்த படத்தை பார்த்தனர். இந்த படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட் காமெடி என அனைத்தும் கலந்த ஒரு படமாக இருந்து வந்துள்ளது. இந்த படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கண்ணன், பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா,  ஸ்ரீ ரஞ்சனி, ரேவதி, முனீஸ் காந்த் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.

படம் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருந்ததால்.. இந்த படம் தற்பொழுது நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் தொடர்ந்து கோடிகளை அள்ளி வருகிறது.

4 நாள் முடிவில் இதுவரை எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவலும் கிடைத்துள்ளது. அதன்படி பார்க்கையில் உலகம் முழுவதும் சுமார் 55 கோடி வசூல் அள்ளி உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. வருகின்ற நாட்களிலும் நல்ல வசூலை அள்ளி நிச்சயம் 80 கோடிக்கு மேல் வசூல் அள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.