சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகரும் நல்ல படத்தை கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பது வழக்கம் அந்த வகையில் நடிகர் தனுஷ் தனது சினிமா பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் ரொம்ப மெனக்கட்டு ஒவ்வொரு படத்திற்காகவும் நடிக்கிறார் அந்த ஒவ்வொரு படமும் வெற்றி படமாக மாறுகிறது.
அந்த வகையில் இப்பொழுது கூட மித்ரன் ஆர் ஜவகர் என்ற இயக்குனருடன் மீண்டும் ஒரு முறை கைகோர்த்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்தார் இந்த படம் அண்மையில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க அப்பா மகன் பாசம் மற்றும் செண்டிமெண்ட் நண்பர்கள் போன்றவற்றை..
எடுத்துரைக்கும் ஒரு படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று.. தொடர்ந்து இந்த படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை எதிர்த்து இப்பொழுது பல்வேறு திரைப்படங்கள் திரையரங்கில் வந்து இருந்தாலும் இந்த படத்திற்கான மவுசு குறையாமல் இருப்பதால் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
9 நாட்களில் ஏற்கனவே 70 கோடி வசூல் செய்து உள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இதுவரை இந்த படம் 75 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களிலும் இந்த படம் நல்ல வசூலை அள்ளி 100 கோடி கிளப்பில் இணையும் என பலரும் கூறி வருகின்றனர்.
மேலும் தனுஷ் கேரியரில் இந்த படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷின் நானே வருவேன், வாத்தி ஆகிய திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாகுவதால் தனுஷின் மார்க்கெட் அசுர வளர்ச்சியை எட்டும் என சொல்லி வருகின்றனர். இதனால் நடிகர் தனுஷ் செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகிறாராம்