முக்கிய இடத்தில் வசூல் வேட்டையாடும் தனுஷின் திருச்சிற்றம்பலம் – விஜய், அஜித்துக்கு அடுத்து தனுஷ் தான்..

dhanush
dhanush

நடிகர் தனுஷ் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள திருச்சிற்றம்பலம் படம் கூட ரசிகர்களையும் தாண்டி மக்களுக்கு ரொம்ப பிடித்த படமாக இருந்ததால் தொடர்ந்து இந்த படத்திற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.

இயக்குனர் மித்திரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான திருச்சிற்றம்பலம் படம் காதல் செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த ஒரு திரைப்படமாக இது உருவாகியது இந்த படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து நித்தியா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானிசங்கர் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா மற்றும் பலர் சூப்பராக நடித்தனர் படம்.

அண்மையில் வெளிவந்தது ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட படம் சூப்பராக இருந்ததால் நல்ல வரவேற்பை பெற்றது சூப்பராக ஓடிக் கொண்டிருந்த காரணத்தினால் வசூலும் அதிகரித்தது தற்போது வரை மட்டுமே இந்த திரைப்படம் 60 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன வருகின்ற நாட்களிலும் நல்ல வசூலை அள்ளித்தான் இந்த படம் நிற்கும் என சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் தற்பொழுது தனுஷின் திருச்சிற்றம்பலம் படம்  USA வில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பார்க்கையில் இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் முதல் ஐந்து இடத்தை பிடித்த படங்கள் எது என்பது குறித்து தகவல்கள் கிடைத்து உள்ளது.

1. கமலின் விக்ரம் 2. விஜயின் பீஸ்ட் 3. சிவகார்த்திகேயன் நடித்த  டான். 4. அஜீத்தின் வலிமை 5. இடத்தில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் இடம் பிடித்துள்ளது. வருகின்ற நாட்களில் நல்ல வசூலை அள்ளி இன்னும் சில இடங்கள் முன்னேற தனுஷுக்கு வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இடம் மட்டுமல்ல பல்வேறு முக்கிய இடங்களில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் நல்ல வசூலை அள்ளி பல சாதனைகளை தகர்த்தெறிந்து புதிய சாதனை படைத்து வருகிறது.