தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் இதுவரை நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்கள்தான். இருப்பினும் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜகமே தந்திரம், மாறன் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது. இதை நன்கு உணர்ந்து கொண்ட நடிகர் தனுஷ்.
சிறந்த இயக்குனர்களுடன் கதை கேட்டு தற்போது நடந்து வருகிறார் அந்த வகையில் தனுஷ் கையில் தற்பொழுது வாத்தி, நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் கைவசம் இருகின்றன. இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் உருவான திருச்சிற்றம்பலம் படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்கில் வெளிவந்து வெற்றி நடை கண்டு வருகிறது.
இந்த படம் முழுக்க முழுக்க காமெடி சென்டிமென்ட் காதல் ரொமான்ஸ் என அனைத்தும் அற்புதமாக இருந்ததால் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா, பிரகாஷ்ராஜ், பாரதிராஜா மற்றும் பலர் நடித்து அசதி உள்ளனர்.
இந்த படம் இதுவரை நல்ல வசூல் வேட்டை கண்டு வருவதால் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது படக்குழு. வருகின்ற நாட்களிலும் நல்ல வசூலை அள்ளும் என படுக்குழு நம்பி இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் படத்தின் வசூலை பார்த்துவிட்டு தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிசல்ட்டை இப்பொழுது அறிவித்துவிட்டது.
Namma pazham jeichuttaan 💥 it’s blockbuster hit சன் பிக்சர்ஸ் நிறுவனம் சொல்லி உள்ளது இதற்கு தனுஷும் ஹாட்டின் சிம்பலை போட்டு பதிவிட்டு உள்ளார். இச்செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. ரசிகர்களும் இதை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்.
— Dhanush (@dhanushkraja) August 20, 2022