தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் – இதுவரை உலகம் முழுவதும் அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

dhanush-
dhanush-

நடிகர் தனுஷ் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். இவர் கடைசியாக நடித்த மாறன், ஜெகமே தந்திரம் ஆகிய படங்கள் சொல்லிக்கொள்ளும்படி வெற்றியை ருசிக்க வில்லை அதனை தொடர்ந்து இவர் மித்ரன் ஆர் ஜவகர் என்ற இயக்குனருடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து தனுஷ் நடித்த திரைப்படம்.

தான் திருச்சிற்றம்பலம் படம். இந்த படம் கடந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது இந்த படத்தில் தனுஷ் உடன் நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ராசி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் அப்பா மகன் சென்டிமென்ட், பிரண்ட்ஷிப் காதல் என அனைத்தும் கலந்த ஒரு படமாக உருவாகி இருந்தது.

இந்த படம் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது ஆரம்பத்திலேயே இந்த படத்தின் வசூல் சூப்பராக அள்ளியதை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் இன்னும் இந்த படத்தின் வசூல் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால்..

இதுவரை தனுஷின் திருச்சிற்றம்பலம் எவ்வளவு வசூல் செய்து உள்ளது என்பது குறித்து தான் பார்க்க இருக்கிறோம். அதன்படி பார்க்கையில் சென்னை தமிழ்நாடு மற்றும் இன்று உலக அளவில் இந்த திரைப்படம் இதுவரை சுமார் 70 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.

வருகின்ற நாட்களிலும் இந்த படத்திற்கான வரவேற்பு அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது அதேசமயம் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தும் என கணிக்கப்பட்டுள்ளது இதனால் படக்குழுவும், நடிகர் தனுஷும் செம்ம சந்தோஷத்தில்  இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது