தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். தனுஷ் தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து வந்த நிலையில் திடீரென்று இவருடைய திரைப்படங்கள் தமிழில் தோல்வியை அடைந்தது இதன் காரணமாக வெற்றி திரைப்படத்தை தர வேண்டும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டார்.
இப்படிப்பட்ட நிலைகள் தற்போது முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக வைத்து வெளியாகியுள்ள திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். மித்ரன் ஜகவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வரும் இத்திரைப்படத்தில் நித்யா மேனன் ஒருதலையாக தனுஷை விரும்பி வருகிறார். மேலும் ராசி கண்ணா,பிரியா பவானி சங்கர் ஆகியோர் தனுஷை காதலித்த பிறகு இவர்களுக்கு பிரேக்கப் ஆகிறது.
இந்நிலையில் தனுஷின் தாத்தாவாக பாரதிராஜாவின் அறிவுரையின் படி நித்யா மேனன் தனுஷை காதலிக்கிறார் என்பதை புரிந்து கொள்கிறார். இந்த காட்சி இதற்கு முன்பு அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே திரைப்படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது அதாவது இந்த படத்தில் ரித்திகா சிங் அசோக் செல்வனை விரும்புகிறார் அதன் பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதால் அசோக் செல்வனும் திருமணம் செய்து கொள்வார்.
முதலில் இவர்கள் நண்பர்களாக தான் இருப்பார்கள். இதன் காரணமாக திருமணத்திற்கு பிறகு ரித்திகா சிங் தன்னுடைய மனைவியாக ஏற்றுக் கொள்ள முடியாமல் விவாகரத்து வரை அசோக் செல்வன் செல்கிறார். அப்பொழுது கடவுள் உருவமாக விஜய் சேதுபதி வாழ்க்கை மாற்ற அசோக் செல்வனுக்கு இன்னொரு சான்ஸ் கொடுக்கிறார் இப்படிப்பட்ட நிலையில் வாணி போஜனை காதலித்தாலும் கடைசியில் ரித்விக்கா சிங் காதலை உணர்ந்து அவருடன் சேர்கிறார்.
இந்தப் படத்தினை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான பத்ரி இந்த படத்தில் சிறு வயது தோழியான பூமிகாவின் காதலை புரிந்து கொள்ளாத விஜய் வேறு ஒரு பெண்ணுடன் காதலில் விழுகிறார் அதன்பிறகு பணத்துக்காக காதலித்த அந்த பெண் வேறு ஒரு நபரை தேடி சென்று விடுவார். இப்படிப்பட்ட நிலையில் பூமிகா தான் தன் மீது உண்மையான காதல் வைத்துள்ளார் என்பதை உணர்ந்து அவரை ஏற்றுக் கொள்வார் விஜய். இவ்வாறு இந்த இரண்டு படங்களின் கதையை வைத்து தான் திருச்சிற்றம்பலம் உருவாக்கப்பட்டுள்ளதாக சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.