அண்மை காலமாக தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக மாறி உள்ளன அந்த வகையில் இப்பொழுது கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளியான விருமன் திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு கிராமத்து கதையாக இருந்தது இந்த படம் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதன் காரணமாக தொடர்ந்து வசூலிலும் அடித்து நொறுக்கியது. விருமன் திரைப்படத்தில் கார்த்தியுடன் கைகோர்த்து அதிதி ஷங்கர், மைனா நந்தினி, சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ்ராஜ், மனோஜ், சிங்கம் புலி, சூரி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். இந்த படம் தற்பொழுதும் தொடர்ந்து வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தை தொடர்ந்து வெளி வந்த தனுஷின் திருச்சிற்றம்பலம் படமும் நல்ல விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படம் அப்பா மகன் சென்டிமென்ட் மற்றும் நண்பர்கள் காதல் என அனைத்தும் அற்புதமாக படத்தில் இருந்து வந்துள்ளதால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
தொடர்ந்து தனுஷின் திருச்சிற்றம்பலம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் விருமன் மற்றும் திருச்சிற்றம்பலம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பார்க்கையில் இந்த ஆண்டு வெளியான இந்த இரண்டு படங்களும் நல்ல வசூல் வேட்டை தான் .
அதிலும் குறிப்பாக தனுஷின் திருச்சிற்றம்பலம் 8 நாள் முடிவில் மட்டுமே சுமார் 68 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல விருமன் திரைப்படமும் 15 நாள் முடிவில் மட்டும் சுமார் 63 கோடி வசூல் செய்து இருக்கிறதாம். இந்த இரண்டு படங்களும் வருகின்ற நாட்களில் நல்ல வசூலை அள்ளும் என சொல்லப்படுகிறது இச்செய்தி தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.