இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக ரஜினியின் மகளான ஐஸ்வர்யா இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷின் 3, கௌதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.
சமீபத்தில் ஐஸ்வர்யா அவர்கள் தனது கணவரான தனுஷ் அவர்களுடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து பல பிரச்சனையில் உள்ளார். இந்நிலையில் தற்போது அடுத்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கங்குலியின் வாழ்க்கை வரலாறு பற்றி படமாக எடுக்க உள்ளார்.
சமீபத்தில் நடந்த ஐபிஎல் பிளே-ஆப் போட்டிகளை பார்ப்பதற்காக தனது இரண்டு மகன்களுடன் கொல்கத்தா சென்று உள்ளார். அப்போது பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் இரவு டின்னருக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் விரைவில் உருவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அந்த படத்தை இயக்குகிறாரா? என்று கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாதிசால் என்ற பாலிவுட் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் முடிந்தவுடன் அவர் கங்குலி படத்தை இயக்குவது குறித்து அறிவிக்கை விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்திற்கு ஹிருத்திக் ரோஷன்,ரன்வீர் கபூர்,சித்தார்த் மல்கோத்ரா, ஒரு சில பிரபல நடிகர்கள் கங்குலி வரலாறு திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பாகவே இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்களான சச்சின் டெண்டுல்கர், டோனி, கபில் தேவ், ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் தற்போது கங்குலியின் வாழ்க்கை வரலாரை படமாக இயக்க உள்ளதால் ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.