தமிழ் சினிமாவில் சிறப்பான கதை அம்சங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த சமீப காலமாக தனுஷ் வெற்றி மேல் வெற்றியை கொடுப்பதால் புகழின் உச்சியில் இருக்கிறார். மேலும் தமிழில் தாண்டி தற்போது பாலிவுட், ஹாலிவுட் என சுத்தி வரும் தனுஷ்க்கு தற்போது ஏகப்பட்ட ரசிகர்கள் கிடுகிடுவென உயர்ந்து உள்ளனர்.
தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹாலிவுட்டில் தி கிரே மேன் என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்துள்ளது இதை தொடர்ந்து அவர் உடனடியாக சென்னை வர உள்ளார்.
வந்தவுடன் அவர் எந்த படத்தில் நடிப்பார் என்பது மிகப்பெரிய கேள்வியாக ரசிகர்கள் மனதில் இருந்து வந்தது காரணம் செல்வராகவனுடன் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் அதுபோல சேகர் கம்முலா என்ற இயக்குனரின் படத்திலும் நடிக்க இருந்ததாக தகவல்கள் கசிந்த நிலையில் தற்பொழுது இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் எஸ் கலைபுலி தாணு
அவர் கூறியது : தனுஷம், செல்வராகவனும் மீண்டும் ஒருமுறை இணைய உள்ளனர். நானே வருவேன் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என கூறி உள்ளார். இச்செய்தியை ரசிகர்கள் கொண்டாடி வருகிறது.
இச்செய்தியை இணையதள பக்கத்தில் ரசிகர்கள் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.