திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து இதுவரை யாரும் பார்த்திராத தனுஷின் புதிய புகைப்படம்.!

dhanush

பல தேசிய விருதுகளை பெற்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்த நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் தனுஷ் இவரது திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதால் இவருக்கு தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து இவர் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் தமிழில் நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது சமீபத்தில் தான் இவர் மாறன் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது மித்ரன் ஜவஹார்  இயக்கும் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து நடிகை ராசி கண்ணா, நித்யாமேனன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய மூன்று நடிகைகள் நடிப்பதால் இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான கதைகளும் கொண்டதாக அமையும் என கூறப்படுகிறது.

குறிப்பாக தனுஷ் நடிக்கும் அனைத்து திரைப்படங்களுக்கும் சமீபகாலமாக நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் இந்த திரைப்படத்தையும் இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் ஏனென்றால் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் இவருக்கு பல விருதுகள் மற்றும் பல புகழை தேடித் தந்தது அதேபோல இந்த திரைப்படத்தின் தலைப்பு வித்தியாசமாக இருப்பதால் இந்த திரைப்படமும் கிராமத்து கதை களம் கொண்ட திரைப்படமாக இருக்குமா என பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

dhanush
dhanush

மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி ஒன்று தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இந்த பாடல் காட்சி படப்பிடிப்பில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.