தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன் மற்றும் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டு திரைப்படங்களும் மோதிக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளிவந்து வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.
இந்த திரைப்படத்தில் நித்யா மேனன், ராசிக் கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட மூன்று நாயகிகள் நடித்திருந்தார்கள். இவர்களை தொடர்ந்து பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் தனுஷ் தன்னுடைய சிறிய வயதிலிருந்து தோழியாக இருந்து வந்த நித்யா மேனனை கடைசியில் திருமணம் செய்து கொள்வார்.
இதற்கிடையில் ராசிக் கண்ணா,பிரியா பவானி சங்கர் ஆகியவர்களுடன் எப்படி காதல் வயப்படுகிறார் பிறகு எதனால் பிரிகிறார்கள்என்பதனை மையமாக வைத்த இந்த திரைப்படம் உருவாகி இருந்தது.மேலும் இந்த திரைப்படத்தில் மித்ரன் ஜாகவர் இயக்க நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் அனிருத் கூட்டணியில் அமைந்திருந்தது.மேலும் இந்த படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து வாத்தி மற்றும் செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகி வரும் நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இந்த இரண்டு திரைப்படங்களும் திரைக்கு வர தயாராக இருக்கிறது இவ்வாறு தற்பொழுது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் நானே வருவேன் திரைப்படம் வெளியாகும் நிலையில் இது குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது இந்த படத்தின் டிரைலரை செப்டம்பர் 11ஆம் தேதியும், இந்த படத்தினை செப்டம்பர் 30ஆம் தேதி அன்றும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம். இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவலை இன்னும் பட குழுவினர்கள் வெளியிடவில்லை. இப்படிப்பட்ட நிலையில் அதே நாளில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 1 திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். மேலும் இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகி மோத இருக்கிறது.