தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் செல்வராகவன். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், என் ஜி கே போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக நடிகரும் இவரது தம்பியுமான தனுஷை தமிழ் சினிமா உலகில் உயர்த்தி விட்டவர் செல்வராகவன் என்பது குறிப்பிடதக்கது சினிமா உலகில் இப்படி சிறப்பாக ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென சினிமா உலகில் நடிக்க போனது தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது .
மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது உடலை மாற்றிக் கொண்டு நடிக்கிறார் கீர்த்தி சுரேஷுடன் முதலில் ஆயுதம் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். அதைத்தொடர்ந்து லிஸ்ட் திரைப்படத்திலும் செல்வராகவன் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் உடலை முரட்டுதனமாக மாற்றியுள்ளார்.
இப்படி இருக்கின்ற நிலையில் ஏற்கனவே செல்வராகவன் நான் எனது தம்பி உடன் இணைந்து நானே வருவேன் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளேன் என கூறியிருந்தார். அது தற்போது உறுதியாகி உள்ளது .மேலும் இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கிறார் மேலும் இந்த திரைப்படத்தில் மற்றும்மொரு முக்கிய நடிகரையும் தட்டி தூக்கி உள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் டாக்டர் திரைப்படத்தில் தனது அசாதாரணமான நகைச்சுவையை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்த யோகி பாபுவை தற்பொழுது நானே வருவேன் திரைப்படம் கமிட் செய்து உள்ளது. ஏற்கனவே தனுஷுடன் இணைந்து கர்ணன் என்ற திரைப்படத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் முதல் முறையாக செல்வராகவன் இயக்கத்தில் யோகிபாபு இணைந்துள்ளது படத்திற்கு ஒரு நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது.