தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ் இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான பல்வேறு திரை படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த வருகிறது.
மேலும் இவர் சமீபத்தில் நடித்த வேலையில்லா பட்டதாரி அசுரன் கர்ணன் ஆகிய அனைத்து திரைப்படங்களும் மெகா ஹிட் அடித்த நிலையில் தற்போது நான்காவது முறையாக கலைபுலி எஸ் தாணு இயக்கத்தில் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார்.
மேலும் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அவர்கள் தான் இசையமைத்து வருகிறார் அந்த வகையில் செல்வராகவன் தனுஷ் கலைபுலி எஸ் தாணு என பலரும் ஒன்றிணைவது இந்த திரைப்படத்தில் ஒரு சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது
நடிகர் தனுஷ் சமீபத்தில் ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடித்து வருவது மட்டுமில்லாமல் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் என்ற திரைப்படத்திலும் மித்ரன் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்து ரொம்ப பிசியாக இருந்து வருகிறார். அதேபோல செல்வராகவனும் சாணி காகிதம் என்ற திரைப்படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் கூட வில்லனாக நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் தற்போது இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவ்வாறு தனுஷ் மற்றும் செல்வராகவன் என இருவருமே பிஸியாக இருப்பதன் காரணமாக நானே வருவேன் திரைப்படத்தின் இயக்கம் தள்ளிக்கொண்டே போகிறது.
இவ்வாறு இவர்கள் அண்ணன் தம்பியாக இருக்கும் ஒரே காரணத்தினால் தான் இந்த திரைப்படம் பற்றி எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருக்கிறது இதுவே வேறு ஏதேனும் ஒரு ஹீரோ இயக்குனராக இருந்தால் கண்டிப்பாக பிரச்சனை வந்துவிடும் என ரசிகர்கள் அரசல்புரசலாக பேசி வருகிறார்கள்.