தனுஷின் தாய் கிழவி பாடலை தனது பாணியில் பாடி அசத்திய மாற்றுத்திறனாளி யூடியூப் பிரபலம்.! வைரலாகும் வீடியோ..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் சமீப காலங்களாக கோலிவுட்டையும் தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என தொடர்ந்து பல மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படம் உருவாகி வருகிறது.

தனுஷின் அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் தனுஷை இத்திரைப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார்.  மேலும் இத்திரைப்படத்திற்காக ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிரி உள்ளது.இவ்வாறு தனுஷை தற்பொழுது ஒட்டுமொத்த சினிமாவே தூக்கி வைத்து கொண்டாடி வந்தாலும் இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் உருவ கேள்வி செய்யப்பட்டு அதிக விமர்சனத்திற்கு உள்ளானார்.

அதன் பிறகு அனைத்தையும் தாங்கிக் கொண்டு தனது விடா முயற்சியினாலும் கடின உழைப்பினாலும் உலகளவில் வளர்ந்து மிக முக்கியமான நடிகராக தனுஷ் விளக்குகிறார்.இவர் நடிப்பில் வெளிவந்த யாரடி நீ மோகினி,வேலையில்லா பட்டதாரி போன்ற திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது இதன் மூலம் தான் அடுத்தடுத்து திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

இந்நிலையில் நானே வருவேன் திரைப்படத்தின் தொடர்ந்து இயக்குனர் மித்ரன் ஜகவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராசி கண்ணா உள்ளிட்ட நடிகைகள் நடித்துள்ளார்கள். இவர்களை தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், முனீஸ் காந்த் ஆகியோர்கள் நடித்துள்ளார்கள் மேலும் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தினை நெட் ஜாயண்ட் மூவிஸ் நிறவனம் வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ்சாக உள்ளது. முன்னதாக திருச்சிற்றபலம் திரைப்படத்தில் இடம்பெற்று இருந்த தாய் கிழவி பாடல் வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் வைரலானது.

அதோடு மட்டுமல்லாமல் இந்த பாடலுக்குப் பிறகு ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் இத்திரைப்படத்திற்காக காத்து வருகிறார்கள் இந்த பாடலை பாடகர் திருமூர்த்தி தனக்கே உரியதான பாணியில் பிளாஸ்டிக் குடத்தில் தாளம் போட்டபடி பாடல்களை பாடுவதும் அது சமூக வலைதளத்தில் வைரலானதும் வழக்கம்.

அந்த வகையில் தற்பொழுது விக்ரம் படத்த இடம் பெற்றிருந்த பத்து தலை பாடலையும் மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி பாடிய அசைத்தி இருந்தார்.இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது மேலும் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் திருமூர்த்தி நேரில் சந்தித்து பாராட்டினார் ஏஆர் ரகுமான் இசை பள்ளியிலும் திருமூர்த்தியை சேர்த்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் தற்பொழுது தனுஷின் தாய்கிழவி பாடலை திருமூர்த்தி தனது பானியில் பாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.