தமிழ் சினிமாவில் இன்று வெற்றி இயக்குனராக ஓடிக் கொண்டிருப்பவர் வெற்றிமாறன். இவர் எப்பொழுதுமே நாவல் மற்றும் உண்மை கதைகளை படமாக எடுப்பதில் ரொம்பவும் கை தேர்ந்தவர். இவர் முதலில் பொல்லாதவன் படத்தை எடுத்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து ஆடுகளம், அசுரன், வடசென்னை, விசாரணை, விடுதலை என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து அசத்தியுள்ளார்.
அடுத்ததாக கூட விடுதலை இரண்டாவது பாகத்தை எடுத்து வருகிறார் அதை வெற்றிகரமாக முடித்துவிட்டு நடிகர் சூர்யாவுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து வாடிவாசல் படத்தை எடுக்க இருக்கிறார் அண்மையில் இந்த படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகி வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் ஒரு பேட்டியில் ஆடுகளம் திரைப்படம் குறித்து பேசி உள்ளார்.. ஆடுகளம் படத்திற்கு முதலில் சண்டக்கோழி என பெயரிடப்பட்டது. ஆனால் லிங்குசாமி இயக்கத்தில் அதே பெயரில் படம் வெளியாகிவிட்டதால் சேவல் என தலைப்பு வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
தலைப்பை பதிவு செய்யப் போகும்போது தான் தெரிகிறது அந்த தலைப்பு இயக்குனர் ஹரிடம் இருப்பதாக தகவல்கள் கிடைத்தன இயக்குனர் ஹரியை தொடர்பு கொண்டு சேவல் தலைப்பை தருமாறு கேட்ட போது குலதெய்வம் கோயிலில் வைத்து வழிபாடு செய்து பூஜை போட்டு விட்டேன்.
இல்லை எனில் பட தலைப்பை கொடுத்து விடுவேன் என ஹரி கூறியதாக பின்னர் களம் என தலைப்பு வைக்கப்பட்டது பிறகு ஆடுகளம் என இறுதியாக முடிவு செய்யப்பட்டது. இந்த தலைப்பு தனுஷுக்கு ரொம்பவும் பிடித்த போகவே படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது என கூறினார் இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.