விருதுகளை அள்ளி குவித்த தனுஷின் திரைப்படம்..! உற்சாகத்தில் படக்குழு.!

dhanush
dhanush

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் பலரும் அவரவர்களுக்கு எந்த மாதிரியான படங்களில் நடித்தால் வெற்றி பெறுமோ அதனை தேர்வு செய்து நடித்து வருகின்றனர். அந்த வகையில் அஜித் விஜய் போன்றவர்கள் ஆக்சன் படங்களை தேர்வு செய்து நடிக்க நடிகர் சிவகார்த்திகேயனோ காமெடி படங்களை கொடுத்து வர நடிகர் தனுஷ்.

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து அதில் வெற்றி கண்டு வருகிறார். இவரது படங்கள் ஒவ்வொன்றும் அதிகளவு வசூலை ஈட்ட வில்லை என்றாலும் கதை அம்சம் மக்கள் மற்றும் பிரபலங்கள் என பலருக்கும் பிடித்து போய் தேசிய விருது பெரும் அளவிற்கு இருக்கும். அந்த வகையில் கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கர்ணன்.

இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து ஹீரோயின் ஆக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் அறிமுகமானார் அவரைத் தொடர்ந்து லால், யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியன் போன்றவர்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இந்த நிலையில் இந்த 2022 ஆம் ஆண்டிற்கான சைமா விருது விழா அண்மையில் பெங்களூரில் நடைபெற்றது.

இந்த விழாவில் கேஜிஎப் நடிகர் யாஷ், பாலிவுட் நடிகர் ரன்வீர், கமலஹாசன், அல்லு அர்ஜுன், லோகேஷ் கனகராஜ், ஆர்யா, பிரியங்கா அருள் மோகன் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டுக்கான சைமா விருது விழாவில் தனுஷின் கர்ணன் திரைப்படம் மூன்று விருதுகளை தட்டிச் சென்றது.

அதாவது சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை சந்தோஷ் நாராயணன் பெற்றார் சிறந்த துணை நடிகைக்கான விருதை லட்சுமி பிரியா சந்திரமௌலி பெற்றார் மற்றும் சிறந்த பின்னணி பாடகி என்ற விருதை தீ வென்றுள்ளார். இதன் மூலம் சைமா விருது விழாவில் கர்ணன் திரைப்படம் மூன்று விருதுகளை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது