பூ, மரியான், பெங்களூர் நாட்கள், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை பார்வதி. தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் புழு இந்த படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நடிகை பார்வதி அடுத்ததாக விக்ரம் உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க காமிட் ஆகியுள்ளார் இந்த நிலையில் நடிகை பார்வதி pregnancy டெஸ்ட் கிட்ஸ் பாசிட்டிவ் காட்டியிருப்பதைப் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்கள்.
அது மட்டுமல்லாமல் அவர் ஒரு பதிவையும் போட்டுள்ளார் அதாவது so…the wonder begins என பார்வதி அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். இதனை அறிந்த பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். திருமணம் குறித்து எந்த ஒரு அறிவிக்கையும் வெளியிடாத நடிகை பார்வதி திடீரென கர்ப்பமாக இருப்பதை பதிவிட்டு இருக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதே போல் நடிகை நித்யா மேனனும் இதே பதிவை போட்டு இருக்கிறார் இதனால் மேலும் ஒரு பரபரப்பு நிலவி வருகிறது. கடைசியாக நித்யா மேனன் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.
இந்த நிலையில் நடிகை நித்யா மேனன் பார்வதி போட்ட அதே பதிவை போட்டு இருக்கிறார். இதனால் தனுஷ் படத்தில் நடித்த நடிகைகள் ஒரே டைமில் கர்ப்பமாக இருக்கிறார்கள் இதுதான் தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இவர்கள் இருவரும் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.