அஜித், விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக பட்டாசு வெடித்தும் பால்அபிஷேகம் செய்தும் அதகலப்படுத்திய தனுஷ் ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ.

naane-varuven
naane-varuven

செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் நீண்ட வருடங்கள் கழித்து உருவாகியுள்ள திரைப்படம் தான் நானே வருவேன் இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிகில் திரைப்படத்தில் நடித்த இந்துஜா மற்றும் ஸ்வீடன் நாட்டு நடிகை  எல்லிரம் ஆகியவர்கள் நடித்துள்ளார்கள். இதற்கு முன்னர்  தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, திரைப்படங்கள் மாபெரும் ஹிட் அடித்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதனால இந்த திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இதற்கு முன் தனுஷ் நடிப்பில் வெளியாகிய திருச்சிற்றம்பலம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் ஹிட் அடித்தது அந்த வகையில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படமும் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் தனுஷ் நடிப்பில் வெளியாகிய திருச்சிற்றம்பலம் திரைப்படம் 8 மணி காட்சி தான் வெளியானது அதேபோல் நானே வருவேன் திரைப்படமும் எட்டு மணி காட்சி தான் திரையரங்குகள் ஒளிபரப்பப்பட்டது.

வழக்கமாக தனுஷ் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு 4 மணி காட்சிகள் திரையிடப்படுவது வழக்கம் ஆனால் இந்த வருடம் அவர் நடிப்பில் வெளியாகிய எந்த ஒரு திரைப்படத்திற்கும் 4 மணி காட்சிகள் திரையிடப்படவில்லை இதனால இவ் உலகம் முழுவதும் என்று வெளியாகும் நானே ஒருவன் திரைப்படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடியுள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் பிரம்மாண்ட கட்டவுட் வைத்து பாலபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து என ஆரவாரமாய் கொண்டாடி உள்ளார்கள்.

நானே ஒருவன் திரைப்படத்தை பெரிய அளவில் பிரமோஷன் செய்யவில்லை என்பதால் குறைந்த அளவு வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தனுசு ரசிகர்கள் அதை எல்லாம் தவிடு பொடியாக்கி பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.

பிரம்மாண்ட கட் அவுட் வைத்து பாலபிஷேகம் பட்டாசு என அதகளப்படுத்தி அஜித் விஜய் ரசிகர்களையே  ஆச்சரியப்பட வைத்துள்ளார்கள் இதோ அதன் வீடியோக்கள்.