ஆளாளுக்கு அப்டேட் விட்டு காண்ட் ஏத்துறாங்களே.! கேப்டன் மில்லர் அப்டேட்டால் அஜித் ரசிகர்கள் கவலை.!

dhanush
dhanush

Ajith Vidaamuyarchi: லைகா நிறுவனம் தரப்பிலிருந்து எந்த ட்வீட் போட்டாலும் உடனடியாக அஜித் ரசிகர்கள் தங்களது வேதனைகளை தெரிவித்து வருகின்றனர். அதாவது சமீப காலங்களாக பொன்னியின் செல்வன் 2, சந்திரமுகி 2, இந்தியன் 2, தலைவர் 171, லால் சலாம், விஜய் மகன் சஞ்சயின் புது படம் என தொடர்ந்து ஏராளமான படங்களின் அப்டேட்களை லைகா நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

ஒவ்வொரு அறிவிப்பு வரும் பொழுதும் அஜித் ரசிகர்கள் வேதனை அடைந்து வரும் நிலையில் தற்பொழுது தனுஷின் கேப்டன் மில்லர் பட அப்டேட் வெளியாகி உள்ளது. ராக்கி, சாணி காகிதம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷை தொடர்ந்து சிவராஜ் குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

கேப்டன் மில்லர் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானதை தொடர்ந்து தற்பொழுது மீண்டும் லைகா நிறுவனம் புதிய அப்டேட்டை வெளியிட்ட உள்ளார்கள். அதாவது தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை ஓவர்சீஸ் மார்க்கெட்டில் மிகப்பெரிய அளவிற்கு கொண்டு செல்லப்படும் என கேப்டன் மில்லர் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்த நிலையில் அதனை தற்போது லைகாவிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதற்கு முன்பு அஜித்தின் துணிவு படத்தின் ஓவர்சீஸ் உரிமையை பெற்ற லைகா நிறுவனம் மிகப்பெரிய அளவில் அந்த படத்தினை கொண்டு சென்றது. அதேபோல் பொன்னியின் செல்வன் படமும் வெளிநாடுகளில் வசூல் வேட்டையை நடத்தியது.

இதனை தனுஷ் ரசிகர் கொண்டாடி வரும் நிலையில் அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி சூட்டிங் எப்பொழுது ஆரம்பிக்கிறது என்ற ஒரு சின்ன அப்டேட் வந்தாலும் அதனை வேற லெவலில் ட்ரெண்டாக்கி விடுவார்கள். ஆனால் தொடர்ந்து மற்ற நடிகர்களின் அப்டேட்டுகள் வெளியாகி வருவதனால் கேப்டன் மில்லர் படத்தின் ஓவர் சீஸ் அப்டேட்டுக்கு கீழ் விடாமுயற்சி படம் குறித்து ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

https://x.com/LycaProductions/status/1706550811919319311?s=20