நடிகர் தனுஷ் சினிமாவில் பல சிறந்த கதையம்சம் உள்ள திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். கடைசியாக தனுஷ் நடிப்பில் ஓடிடி தளத்தில் மாறன் என்னும் படம் வெளியாகியது இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது இயக்குனர் மித்ரன் ஜவகர் உடன் இணைந்து திருச்சிற்றம்பலம் எனும் படத்தில் நடித்து வந்தார்.
இது படம் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி ஓடி வருகிறது. இதற்கு முன் தனுஷ் மற்றும் மித்ரன் ஜவகர் கூட்டணியில் உருவாகி வெளிவந்த யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், குட்டி ஆகிய மூன்று திரைப்படங்களுமே தனுஷின் சினிமா கேரியரில் முக்கிய படமாக அமைந்தது.
தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு அதே இயக்குனருடன் திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்துள்ளார்கள். இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராசி கண்ணா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளனர்.
படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் பலரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்துள்ளது. இந்த நிலையில் படம் வெளியாகி ஒவ்வொரு நாளும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகின்றன.
சன் பிக்சர் நிறுவனம் தயாரித்த இந்த படம் வெளியாகி 6 நாள் முடிவில் சுமார் 65 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் நல்ல வசூலை அள்ளி வருவதால் படக்குழு மற்றும் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மேலும் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி தான் இருக்கும் எனவும் கூறி வருகின்றனர்.