நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் நானே வருவேன் இந்த திரைப்படம் இந்த மாதம் இறுதியில் வெளியாகும் என்று கூறப்பட்டாலும் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்தார்கள் ஆனால் இந்த நிலையில் தற்போது நடிகர் சிம்பு நடித்துள்ள வாத்தி திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை திடீரென அறிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட், என கலைக்கி வரும் நடிகர் தனுஷ் அவர்கள் தற்போது டோலிவுட்டில் அறிமுகமான திரைப்படம் தான் வாத்தி இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கி அட்லூரி அவர்கள் இயக்கியுள்ளார் இந்த படத்தில் வாத்தி கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் நடித்துள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாக உள்ளது.
மேலும் இதனை தமிழில் வாத்தி என்றும் தெலுங்கில் சார் என்றும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வாத்தி திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் அவர்கள் நடித்துள்ளார். வரலாற்று கதை அம்சம் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.
இந்த படத்திற்கு நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைத்துள்ளார் மேலும் யுவராஜ் அவர்கள் ஒளி பதிவு செய்துள்ளார். மேலும் வாத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் வாத்தி திரைப்படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி நடிகர் தனுஷ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
அதன்படி வாத்தி திரைப்படம் வருகின்ற டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். மேலும் நடிகர்கள் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் நானே வருவேன் இந்த திரைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படம் இந்த மாதம் இறுதியில் வெளியாகும் என கூறப்பட்டாலும் இன்னும் ரிலீஸ் தேதியை அறிவிக்கப்படாமல் இருக்கிறார்கள் ஆனால் இதற்கு அடுத்து வரும் திரைப்படமான வாத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளார் தனுஷ். இதைப் பார்த்த ரசிகர்கள் நானே வருவேன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.