Siragadikka aasai serial actress: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த சீரியல் வெற்றிகரமாக வாரம் வாரம் டிஆர்பியில் முன்னேறி வரும் நிலையில் இந்த சீரியலில் கதையின் கதாநாயகியாக நடித்து வரும் மீனா தனுஷ் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை இழந்திருப்பதாக தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் கோமதி பிரியா. இவர் இந்த சீரியலில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் மேலும் இதனை அடுத்து சிறகடிக்க ஆசை சீரியலிலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் மனைவியாக மீனா என்ற கேரக்டரில் நடித்து வரும் நிலையில் இவருடைய கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீப காலங்களாக எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருவதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் சீரியலை பார்த்து வருகிறார்கள்.
எனவே இந்த சீரியலுக்கு டிஆர்பியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதனால் விரைவில் முன்னணி வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் நடிகை கோமதி பிரியா தான் தனுஷ் பட வாய்ப்பை தவற விட்டுள்ளதாக சமீப பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தில் அம்மு அபிராமி கேரக்டரில் நடிக்க முதலில் இவரை தான் அணுகினார்களாம்.
ஆனால் வேறு சில சீரியல்களிலும் கமிட்டாகி இருந்ததனால் அசுரன் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாக கூறியுள்ளார். அசுரன் திரைப்படம் சூப்பர் ஹிட் பெற்ற நிலையில் அம்மு அபிராமியின் கேரக்டரும் நல்ல ரீச்சை பெற்றது. அப்படி கோமதி பிரியா நடித்திருந்தால் வேற லெவலில் பிரபலமடைந்து இருப்பார்.